சென்னையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 26 பேர் சிகிச்சை

  தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 75க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், அரசு மருத்துவமனைகளில் மட்டும் 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் பலர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.