மும்பை வளமையான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

    ஐ.நா., வெளியிட்டுள்ள செழிப்பான நகரங்களின் பட்டியலில் டெல்லியும், மும்பையும் இடம்பெற்றுள்ளன. மும்பை 52வது இடத்தையும், டெல்லி 58வது இடத்தையும் பெற்றுள்ளன. டாக்கா, காத்மாண்டு, கம்பலா ஆகிய நகரங்களை விட மும்பையும், டெல்லியும் ஒரு சில இடங்களே முன்னே உள்ளன.
அதே நேரத்தில், சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங் நகரங்கள், இந்திய நகரங்களை விட பல மடங்கு முன்னே உள்ளன. செழுமையில், சராசரி பிரிவிலேயே இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் செழிப்பை நோக்கி முன்னேறும் 95 நகரங்களின் பட்டியலை ஐ.நா.,வின் வாழ்விடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
நகரங்களின் செல்வச் செழிப்பை மையமாக கொள்ளாமல், அடிப்படை கட்டமைப்பு, சுற்றுப்புறச் சூழல், மக்களின் வாழ்க்கை தரம், உற்பத்தி, சமூக சமத்துவம் போன்றவற்றை  அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.                                                                                                                    
                                                                                      -இணைய செய்தியாளர் - s.குருஜி