காவலர்களுக்கான வீடுகள் திட்டம்

      காவல்துறையினர் அனைவருக்கும் குடியிருப்பு வசதி செய்து தர கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்                        தமிழ்நாடு  சீருடைப்பணியாளர்களுக்காக  “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 673 வீடுகள் கட்ட இன்று அவர் அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம்- செங்கல்பட்டு வட்டம் மேலக்கோட்டையூரில் இந்த வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.
இவர்களில் 36 பேருக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, இதுவரை 50 ஆயிரத்து 424 பேருக்கு வீட்டு வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூறினார். அமைதியை ஏற்படுத்துவதில் காவல்துறையின் பங்கு இன்றியமையாதது என்றார். சட்டத்தின் ஆட்சிக்கு காவல்துறையின் பணி அவசியம் என்று கூறிய அவர், தமிழ்நாடு காவல்துறையினர் இரவு பகல் பாராமல் லட்சிய நோக்குடன் காவல்துறையினர் பணியாற்றி வருவதாக கூறினார்.
அதிகரித்து வரும் மக்கள்தொகை, சிக்கல்கள், பொருளாதார  ஏற்றத்தாழ்வுகள், நவீன தொழில்நுட்பம் போன்றவை காவல்துறையினருக்கு பிரச்னையானதாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.
இதனால் தற்போது காவல்துறையினரின் பணிகள் சிக்கலானதாக இருப்பதாக கூறிய முதலமைச்சர், காவல்துறையை நவீனப்படுத்தவும், நவீன ஆயுதங்கள் வாங்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் காவலர் குடும்பங்களின் மாணவ, மாணவியருக்கும்  கல்வி உதவித்தொகைகளை முதலமைச்சர் வழங்கினார்.
                                                      -சத்திஷ் K.K.K.nagar