பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

         ந்தியாவின் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
கோவா கடல் பகுதியில், இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் இல் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 300 கிலோ  எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து சென்று 290 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
       இந்திய கடற்படையில் ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது. அது ஐ.என்.எஸ்.ராஜ்புத் போர்க்கப்பலில் முழு பயன்பாட்டில் உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    இன்று காலை அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை செலுத்திய போர்க்கப்பல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தான், அது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.                                                                                                                                                                                                                              -பசுமை நாயகன்.