சமையல் எரிவாயு இணைப்பு – காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு

    சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள், அதை தக்கவைத்துக் கொள்ள, தேவைப்படும் அடையாள மற்றும் முகவரி உறுதிப்படுத்தல் நடவடிக்கைக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள், அந்தந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் இதற்கான விண்ணப்பம் பெற்று பூர்த்திசெய்து, உரிய சான்றுகளை அளிக்கலாம் என்று பெட்ரோலிய அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலி பெயர்களிலும், ஒருவரே பல சமையல் எரிவாயு இணைப்புகள் பெறுவதையும் தடுக்கும் வகையில், கே.ஒய்.சி. எனப்படும் சான்றுகளை நாளைக்குள் பெறுமாறு எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அந்தந்த விநியோகஸ்தரிடம் 5 ரூபாய் விலையில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்வதுடன் தேவையான அடையாள ஆவணங்களை இணைத்து அளிக்குமாறு வாடிக்கையாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதற்கான காலக்கெடுவை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிப்பதாக பெட்ரோலிய அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சத்திஷ் K.K.K.nagar