ஃபர்னஸ் எண்ணெய் – கடலில் கலக்கும் அபாயம்

   சென்னை கடற்கறையில் தரை தட்டிய எண்ணெய்க் கப்பலால் கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக கூ|றப்படுகிறது. கப்பலில் இருக்கும் எண்ணெயால் கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நீலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கறையில் தரை தட்டிய பிரதிபா காவிரி கப்பலில் 357 டன்  ஃபர்னஸ் எண்ணெய் என்ற எரிபொருள் உள்ளது. இது  மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்டும். எண்ணெய் ஆகும்.
இந்த எண்ணெய்,  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், தரை தட்டிய கப்பலில் கசிவு உள்ளதா என்பது பற்றி  சிறப்பு நிபுணர்கள் குழு மூலம்  கடலோர காவல்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.இந்த கப்பல்   பழைய கப்பல் என்பதால் இதில் உள்ள எண்ணெய் கசிந்து கடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்நிலையில் தரை தட்டிய கப்பலை ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்ல ம‌காராஷ்ட்ரா  மற்றும் ஒடிசாவிலிருந்து  இரண்டு இழுவைக் கப்பல்கள் வரவழைக்கப்பட உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-சத்தீஷ் குமார்