தீபாவளிக்குச் சொந்த ஊர் பயணம் : டிக்கெட் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

   தீபாவளிப் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல ஏராளமானோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதில் பலர் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதேபோன்று சிதம்பரம், கும்பகோணம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகளில் இருக்கையைப் பிடிக்க அங்கும் இங்கும் ஓடுவதை காண முடிகிறது.
நேற்று மாலை கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று முற்பகல்தான் சீரானது. ஆயினும் தீபாவளிப் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் இன்றும் இயக்கப்படுவதால் கோயம்பேட்டில் மீண்டும் வாகன நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது.
-காஸ்டியும் சுரேஷ்