டெங்கி காய்ச்சல் பரவாமல் இருக்க மக்களின் பங்கேற்பு முக்கியம்

           டெங்கி காய்ச்சல் பரவி வருவதை தடுப்பதற்கு பொது மக்களின் பங்கேற்பு அவசியம் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார் .
டெங்கி அறிகுறியுடன் வருபவர்களை சரியான முறையில் பரிசோதித்து முதலில் அது டெங்கி காய்ச்சல் தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார். இரவு நேரங்களில் கொசு வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களிடமிருந்து தப்பலாம்.
ஆனால் இந்த டெங்கியைப் பரப்பும் கொசு பகல் நேரங்களிலும் கடிக்கும் என்பதால் சுற்றுப் புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தார்.