சென்னையில் விடிய விடிய மழை: டெல்டாவில் கன மழைக்கு வாய்ப்பு

           வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
-பூமித்ரா சுரேஷ்