சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் சின்னப்பாவிற்கு பிடிவாரண்ட்

       சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புனித ஆரோக்கிய அன்னை கிறிஸ்தவ ஆலய பங்கு குரு ஆல்வின் என்பவர் வசூலித்து வரும் பணம் தொடர்பான வரவு மற்றும் செலவு கணக்கு விவரங்களை அவரும், மயிலை மாவட்ட பேராயர் சின்னப்பாவும் தரவில்லை எனக்கூறி, அவர்கள் இருவருக்கும் எதிராக சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழ்ககு தொடரப்ப்டடது.
இந்திய திருச்சபை ஆலய உறுப்பினர் ஃபிரான்சிஸ் ஃபோர்ஜியா என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், வரவு மற்றும் செலவு கணக்குகளை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை அது தொடர்பான ஆவணங்களை சின்னப்பா ஒப்படைக்கவில்லை. இதனையடுத்து பேராயர் சின்னப்பா மற்றும் ஆல்வினை கைது செய்து வரும் 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

-பூமித்ரா சுரேஷ்