சென்னை அருகே விஷ வாயு தாக்கி இருவர் பலி


   சென்னை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களில் இருவர் உயிர் இழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேளம்பாக்கம் அருகே நாவலூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் நேற்றிரவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, விஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நீலாங்கரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-சத்தீஷ்