சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்

                     http://www.noolulagam.com
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் அறிவுத்திருவிழா எனப்படும் புத்தகக் கண்காட்சி, ஒய்.எம்.சி.ஏ., (YMCA) கல்லூரி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 36வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 747 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நுழைவுக்கட்டணமாக 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12வயதுக்குட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு அனுமதி இலவசம். மாணவர்கள் பெருமளவில் வர வேண்டும் என்பதற்காக சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர், வாகன நிறுத்தம், சிற்றுண்டி உள்ளிட்ட வாசகர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் 13 நாட்களும், தினம்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
.-பசுமை நாயகன்