நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தலைமைச் செயலாளருக்கு கண்டனம்

 
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட துப்புரவுத் தொழிலாளி ஒருவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாத ஷீலா பாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி குடிநீர் வழங்கல் துறையில் கோவையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தவர் பழனிச்சாமி. ஊதிய உயர்வு தொடர்பாக இவர் தொடர்ந்த வழக்கில், இவருக்கு ஊதிய உயர்வு வழங்க நகராட்சி குடிநீர் வழங்கல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் இந்த உத்தரவை அப்போது அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் நிறைவேற்றவில்லை.
இதனையடுத்து பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜராக வேண்டும் என 5 மாதங்களுக்கு முன்பே நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. எனினும் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜராகவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரன், அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கு எதிராக ஆயிரக்கணக்கான நீதிமன்ற அவதூறு வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவுக்கு அரசு அதிகாரிகள் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் நேரில் ஆஜராக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டா
-ஹாட் ஸ்பாட் நரேஷ்