ஃபேஸ்புக், Graph Search என்ற புதிய தேடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


     
   சுமார் 100 கோடி பேர் கணக்கு வைத்திருக்கும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், "Graph Search" என்ற புதிய தேடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் போன்ற வழக்கமான தேடுபொறி போல் அல்லாமல், சாதாரணமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இந்த தேடுபொறி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதி, விரைவில், பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கும் என்று ஃபேஸ்புக் வலைத்தள நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள், நண்பர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களைத் தேடுவதற்கும், ஒரே மாதிரியான ரசனை கொண்டவர்கள், ஒரே மொழி பேசுபவர்கள், உள்ளிட்டோரைக் கண்டறிவதற்கும் புகைப்படங்களைத் தேடுவதற்கும் "Graph search" பயன்படும் என்று கூறப்படுகிறது.
Graph Search வசதியைப் பயன்படுத்த விரும்புவோர், ஃபேஸ்புக் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கு தனி பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு, சற்று சரிவைச் சந்தித்து வரும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு, இந்த தேடுபொறி மூலம் உத்வேகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
                                     -ஹாட் ஸ்பாட் நரேஷ்