தமிழகத்தில் 82 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பபு


     தமிழகத்தில்  82 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 2011ம் ஆண்டு 72 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 82 லட்சமாக உயர்ந்துள்ளது. பல்வேறு தரப்பிலும் வளர்ச்சி என்ற நிலையிலும், வேலையின்மை சதவீதம் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 ளங்களில் முக்கியமானதாக கருதப்படுவது மனித வளம். அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா மற்றும் இந்தியாவி்ன் வளர்ச்சிக்கு மனித வளம் மிக முக்கிய காரணியாக கருதப்படுகிறது. ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 மிழகத்தில் ஒரே ஆண்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக கூறப்படுவது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு. 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வந்த இந்த தொழில்கள் மின் வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக ஸ்தம்பித்துள்ளதால் வேலைவாய்ப்பி்ன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
  தே நேரத்தில், நமது கல்வி முறைகள் வேலைக்கு ஏற்ற நிலையில் இல்லை என்றும், இதில் கட்டாயம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களை தொடங்க, தமிழகத்தை நாடி வரும் அந்நிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது வெளியிடும் அறிவிப்புகளின் படி எந்த ஒரு நிறுவனமும் நடந்து கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் ஒரு புறம் நீண்டு கொண்டே போவது போல், அரசு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் அரசின் நடவடிக்கைகளிலும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
 மிழகத்தில் அரசு வேலைக்காக 82 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்வதில் ஆங்கில மொழிப் புலமை பல்வேறு தனித்திறமைகளையும் எதிர்பார்ப்பதால், வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
  மிழகத்தில், சமீப காலமாக கொள்ளைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களில் 25 சதவிகிதம் பேர் பட்டதாரிகள் என்ற தகவல் ஒருவகையில், வேலைவாய்ப்பின்மையின் அவலத்தை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 ரு நாட்டின் இளைஞர் சக்தியை வீணடித்தால் அது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது என்பது இந்நாட்டின் இளைஞர்களை நேர்பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான நடவடிக்கை என்று சமூகவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அரசு முதலீட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
   அரசுத்துறை வேலைவாய்ப்பை மட்டுமே இளைஞர்கள் நம்பாமல் சுயமாக தொழில் செய்வதும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சிப்பதும் தற்காலிக தீர்வாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
                                                                    -ஹாட் ஸ்பாட் நரேஷ்