சென்னையில் மாநில அளவிலான ஜூடோ போட்டி


      குடியரசு தினம் மற்றும் பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் களைக்கட்டின. நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 320 வீரர்களும், 510 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
     ஆண்டு தோறும் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகத்தின் 14 டிவிஷன்களிலிருந்து இளம் ஜூடோ வீரர்கள் பங்கேற்றனர். 23 எடைப் பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு தங்கப்பதக்கத்துடன் தலா ஆயிரத்து 200 ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கத்துடன் தலா 800 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.
                                                     -ஹாட் ஸ்பாட் நரேஷ்