அண்ணா பல்கலைக் கழகத்தில் கணினிஅறிவியல் ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.



 சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி திட்டத்தி ன் கீழ், முதுநிலை கணினி அறிவியல் ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருகி வரும் வாய்ப்புகளுக்கு ஏற்ப திறனுடையவர்களை உருவாக்கும் நோக்கில்எம்.எஸ்.சி நிலையில் கணினி அறிவியல் - ப்ரீ / ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்ற படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  இந்த படிப்பிற்கு வகுப்புகள், இரண்டு ஆண்டு கால அளவில் 4 பருவங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இந்த ஆன்லைன் முறையிலும், செய்முறைப் பயிற்சி, தேர்வுகள், பிராஜெக்ட் ஒர்க், தொடர் அகமதிப்பீடு முறைகள் உண்டு.
  பருவம் மற்றும் செய்முறைத் தேர்வுகள், தேர்வு மையங்களில் நடைபெறும்.
பிராஜக்ட்-ஐ, அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் வந்து மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

  வருடத்திற்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தியாவின் எந்த ஒரு பகுதியைச் சேர்ந்தவரும் இந்த படிப்பில் சேரலாம். கூடுதல் விவரங்களைப் பெற cde.annauniv.edu/MSCFOSS அல்லது mscfoss.au-kbc.org.in ஆகிய இணையதளங்களை அணுகலாம்.

                                                                                              -ஹாட் ஸ்பாட் நரேஷ்