அதிகரிக்கும் கார்பன் அளவால் மாறிவரும் காலநிலையை எப்படி எதிர்கொள்வது


   பேசிக் (BASIC) எனப்படும் ப்ரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 2 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது.அதிகரிக்கும் கார்பன் அளவால் மாறிவரும் காலநிலையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப் படுகின்றன.
  வரும் 27, 28 ஆகிய தேதிகளில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள வளரும் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
  இந்த மாநாட்டில் பூடான், மாலி, அர்ஜன்டினா உள்ளிட்ட வேறு சில நாடுகளும் பங்கேற்றுள்ளன. மாநாட்டின் முதல் நாளான நேற்று BASIC நாடுகளின் வானியல் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
  BASIC நாடுகளின் மாநாடு ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டுக்கு நான்கு முறை நடைபெறும். அந்த சுழற்சி முறையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது.
                                                             -ஹாட் ஸ்பாட் நரேஷ்