மனைவியின் கண் முன்னிலையிலே இளைஞர் வெட்டிப் படுகொலை


  சென்னை ஓட்டேரியில் மனைவி மற்றும் குழந்தைகளின் கண்முன்னே இளைஞர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் என்ற அந்த நபர், தனது நண்பர்களுடன் நேற்றிரவு மது அருந்தினார். அப்போது, நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  பின்னர், சுதாகர் மற்றும் இம்ரான் ஆகிய 2 பேர் விஜயகுமாரை வீட்டுக்கு அழைத்து வந்து அவரது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில், விஜயகுமாரின் வீட்டுக்கு வந்த ஐந்து பேர், மனையின் கண்முன்னிலையிலே அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து, ஓட்டேரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதி செய்து விசாரித்து வருகின்றனர்.