கணிணி மயமாகிப் போன சமூகத்தில் பார்வையற்றோருக்கான பயிலரங்கம்


   கணிணி மயமாகிப் போன சமூகத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் கணிணி, இணையம் போன்றவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் பயிலரங்கம் சென்னை, நந்தனம் அரசுக் கல்லூரியில் நடத்தப்பட்டது.
  இணையத் தென்றல் என்ற பார்வையற்றோர் அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கத்தில் சுமார் 150 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இணையத்தில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வது, கைப்பேசிகளை நவீன முறையில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
   பாரத ஸ்டேட் வங்கியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து அந்த வங்கியின் சென்னை தலைமை அலுவலக துணை மேலாளர் ராம்குமார் விளக்கமளித்தார்.
 பார்வையற்ற மாற்றுத் திறனாளியான ராம்குமார் பார்வையற்றோருக்கான ஏடிஎம்-ஐ பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார். இதுபோன்ற பயிலரங்கங்கள் மூலம் பார்வையற்றோருக்கு இணைய பயன்பாட்டை கற்பிக்க முயல்வதாகவும் இணையத்தென்றல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
                                                                                -ஹாட் ஸ்பாட் நரேஷ்