பெப்பர் ஸ்ப்ரே


                                  

 பாலியல் வன்கொடுமைசம்பவங்களில் இருந்து பெண்கள் தப்பிக்க தற்காப்புக் கலைகள் மட்டுமல்ல, தற்காப்புக் கருவிகளும் கூட உதவி புரிகின்றன. அந்த வகையில் பெண்களின் பாதுகாப்புக்காக சந்தையில் பல புதிய தற்காப்புக் கருவிகள் குவியத் தொடங்கியிருக்கின்றன.
டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இப்படி வெளிச்சத்திற்கு வராத சம்பவங்கள் எத்தனை எத்தனையோ உள்ளன. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும், அது எந்தளவுக்கு பலன் கொடுக்கும் என்பது போக போகவே தெரியும். தன் கையே தனக்குதவி என்று சொல்வதை போல, பாலியல் வன்முறைகளை சமாளிக்க சில தற்காப்பு கருவிகளுடன் களம் இறங்கியிருக்கிறார்கள் சில பெண்கள்.
சந்தையில் குவியும் கருவிகள்: பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சாதனங்கள் சந்தைகளில் குவியத் தொடங்கியிருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது 'பெப்பெர் ஸ்பிரே' என்ற கருவி.
இது மட்டுமின்றி அலாரம், ஒளிவீச்சுக் கருவி என வேறு சில சாதனங்களும் சந்தையில் அணிவகுத்து காத்திருக்கின்றன. பெண்கள் தற்காப்புக்காக சில தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற சாதனங்களை தங்களது பெண் ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியிருக்கின்றன. பாதுகாப்பு சாதனங்கள் தவிர சில மென்பொருட்களையும் நாட துவங்கியுள்ளனர் பெண்கள்.
அவசியமாகும் தற்காப்புக் கருவிகள்:நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்தப்படி, சமுதாயத்தின் சிந்தனை மாறினால் மட்டுமே பாலியல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். என்றாலும், அதுவரை இது போன்ற சாதனங்கள் பெண்களின் தேவை என்பது மறுப்பதற்கில்லை.
ஒரு புறம் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் அதற்கான தண்டனைகள் குறித்த புதிய சட்டங்களை அரசு இயற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இன்னொருபுறம் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிகளை தேடி செல்ல தொடங்கியிருக்கின்றனர் இன்றைய பெண்களும் தனியார் நிறுவனங்களும்.
                                           -ஹாட் ஸ்பாட் நரேஷ்