இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவு நீடிக்கும்


    ந்தியாவுக்கான இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற  உத்தரவு நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    இந்திய மீனவர்கள் இத்தலி கடற்படை வீரர்களால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இத்தலி தூதரை இனியும் நம்பத்தயாராக இல்லை என்றும், அவரின் உத்தரவாதங்களில் நம்பிக்கை இல்லை என்றும் உச்ச நிதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
   இத்தலி தூதர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். இந்திய மீனவர்கள் இருவர் கடந்த ஆண்டு, கொச்சி கடற்பகுதியில்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    இந்த வழக்கில் கைதான இரண்டு இத்தலி கடற்படை வீரர்கள் அந்நாட்டு தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த மாதம் அங்கு  சென்றனர். அவர்கள் இருவரும் 22ம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும். ஆனால், இருவரையும் மீண்டும் இந்தியா அனுப்ப இத்தலி அரசு மறுத்து வருகிறது.