கோடை மற்றம் விடுமுறையை முன்னிட்டி, தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.


    
  தன்படி கோவை அதிவிரைவு ரயில் ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து இயக்கப்படும். அதே ரயில் ஏப்ரல் 17ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை சென்னையில் இருந்தும் இயக்கப்படும். 
    சென்னை-தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில் ஏப்ரல் 18, மே 2,16,30 மற்றும் ஜூன் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், ஏப்ரல் 19, மே 3, 17,31 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் சென்னைக்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை ராமேஸ்வரம் இடையே ஏப்ரல் 25, மே 9,23 மற்றும் ஜீன் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி சென்னை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 11ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. சென்னை திருநெல்வேலி இடையே வாராந்திர ஏசி சிறப்பு ரயில் ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை ஞாயிற்று கிழமைகளில் சென்னையில் இருந்தும், திங்கள்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்தும் புறப்படுகிறது.
    சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் 7ம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரை இயக்கப்படும், நாகர்கோவிலில் இருந்து திங்கள்கிழமைகளில் எழும்பூர் புறப்படும். சென்னையில் இருந்து கொச்சுவேலி ஏசி சிறப்பு ரயில் ஏப்ரல் 12ம் தேதியில் இருந்து ஜூன் 14ம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
    சென்னையில் இருந்து கோவாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில், மே 5ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் சென்னை இடையேயான வாராந்திர அதிவிரைவு ரயிலானது ஏப்ரல் 11ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை இயங்கும்.