8 மணிநேரம் விவசாயப்பணிகளை செய்தால் 3808 கலோரிகளை எரிக்கப்படுகின்றன.

உழைப்பு என்றாலே உடல் சார்ந்த உழைப்பாக மட்டுமே பெரும்பாலும் சித்திரிக்கப்படுகிறது. இப்போது அறிவு ரீதியிலான வேலைகளிலும் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
அதாவது ஒவ்வொரு வேலையிலும் எத்தனை கலோரிகளை நமது உடல் செலவிடுகிறது என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம் பின்வருமாறு.
உண்ணும் உணவும், உடல் உழைப்பும் சரியான விகிதத்தில் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் குறைந்தபட்சமாக 2500 கலோரிகள் அளவுக்கு உணவு உண்ணும் ஒரு சராசரி நபருக்கு அதற்கேற்ற உடல் உழைப்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.. இந்த கலோரிகளை சிலர் உடற்பயிற்சி மூலம் எரிக்கலாம்.
செய்யும் வேலை மூலம் ஒருவர் எவ்வளவு கலோரிகளை இழக்கிறார் என்பதைப்பற்றி இப்போது பார்க்கலாம்..

எந்த வேலைக்கு எவ்வளவு கலோரிகள்... ?
விவசாயத் தொழிலாளர் ஒருவர் ஒருமணிநேரம் விவசாயப்பணிகளை மேற்கொண்டால் 476 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

இதே 8 மணிநேரம் வேலை செய்தால் 3808 கலோரிகளை அவர் எரிக்கிறார். இதேபோல, சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு மணிநேரத்திற்கு சுமை தூக்கினால் 475 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
8 மணி நேரம் அவர் தீவிரமாக உழைத்தால் 3800 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. கட்டட வேலை செய்பவருக்கு 3265 கலோரிகளும், நிலக்கரி சுரங்க வேலை செய்பவருக்கு 3248 கலோரிகளும் செலவாகின்றன.
சாலை போடும் தொழிலாளர்கள் 2720 கலோரிகளும், இயந்திரம் இயக்குபவர் 2176 கலோரிகளும், தச்சுத் தொழில் செய்பவர் 1360 கலோரிகளும் செலவிடுகிறார்.
போக்குவரத்து காவலருக்கு ஒரு மணிநேரத்திற்கு 102 கலோரிகள் வீதம்,. 8 மணிநேரத்தில் 816 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.இதே அளவுதான் தையல் தொழில் மேற்கொள்பவர்களுக்கும் இருக்கிறது.

செலவாகும் கலோரிகள் எவ்வளவு?


கடைகளில் நின்ற நிலையில் 8 மணிநேரம் பணியாற்றும் நபருக்கு ஒரு மணிநேரத்திற்கு 88 கலோரிகள் வீதம், 8 மணிநேரத்திற்கு 704 கலோரிகள் செலவாகின்றன.

உட்கார்ந்த நிலையில் கம்ப்யூட்டர் முன் 8 மணிநேரம் பணியாற்றுபவருக்கு ஒரு மணிநேரத்திற்கு எரிக்கப்படும் கலோரிகள் 34 மட்டுமே.எட்டுமணிநேரம் பணியாற்றினால் 272 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இந்த கலோரி அளவு என்பது தச்சுத் தொழில் செய்பவர் ஒருமணிநேரத்தில் செலவிடும் கலோரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.