சாம்சங் ஸ்மார்ட்போன்களில் தமிழ் மொழி

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் தமிழ் மொழி

   மிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் ஸ்மார்ட்போன்கள் இயங்கும் வசதியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    சாம்சங் காலக்சி பதிப்புகளில் ஆங்கிலம் அல்லாத உள்ளூர் மொழிகளில் பயன்பாடுகளை பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
   அதாவது, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, இந்தி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட உள்ளன.
   முதற்கட்டமாக கேலக்சி கிராண்ட், கேலக்சி எஸ்4, கேலக்சி டேப் ஆகிய பதிப்புகளில் இந்திய மொழி வசதி கிடைக்கும்.
மற்ற கேலக்சி பதிப்புகளில் அடுத்து சில வாரங்களில் இந்த வசதிகள் புகுத்தப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

   ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போன்களை மென்பொருள் புதுப்பிக்கும் (அப்டேட்) போது, இந்திய மொழிகள் சேர்க்கப்படும்.
   இந்த வசதிமூலம், பயனர் இடைமுகமாக மட்டுமில்லாமல், ஃபேஸ்புக், ஜிமெயில், உள்ளிட்ட அப்ளிகேசனை தமிழ் மொழியிலேயே பயன்படுத்த முடியும்...