ஒடிசாவை தாக்கிய பைலின்புயலால் 26லட்சம் மரங்கள்அழிந்தன

பசுமை நாயகன் Pasumai Nayagan

     ஒடிசாவை தாக்கிய பைலின் புயலால் 26 லட்சம் மரங்கள் அழிந்துவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

       கடந்த வாரம் ஃபைலின் புயல் தாக்குதலுக்கு ஆளான பகுதியிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. இன்னும் பல பகுதிகளிலிருந்து தகவல்கள் வரவுள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர். சாலைகள் சீரமைக்கப்பட்ட பின்னரே அழிந்த மரங்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
      கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் மட்டும் 1 லட்சத்தில் 10 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்களை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் மரம் வளர்ப்பு திட்டத்தை பிரம்மாண்ட முறையில் நடைமுறைப்படுத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்திட்டம் குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
  --பசுமை நாயகன்