விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
      பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இதனிடையே இத்தகைய ஆய்வில் இந்தியாவும் பங்கேற்கும் விதமாக விண்கலத்தை அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்திராயன் இரண்டிற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் முதல் செயற்கைக் கோளை ஏவுவது போன்ற எண்ணத்துடனேயே இஸ்ரோ பணிபுரிந்து வருவதாகவும் ரதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-பூமித்ரா சுரேஷ்