தமிழக கடற்கரைப் பகுதிகள் மூழ்கும் அபாயம்

        திகரித்து வரும் புவி வெப்பத்தால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தி்ல் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிவியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 டிரி்ல்லியன் டன் ஐஸ் கட்டிகள் உருகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் சென்னை உட்பட ஏராளமான பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.
இம்மாநாட்டின் தீர்மானங்களையும், முக்கியமான பரிந்துரைகளையும் வரும் 22 ஆம் தேதி அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பினர் பிரதமரிடம் வழங்கவுள்ளனர்.
-பசுமை நாயகன்