டிஜிட்டல் மயமாகும் கேபிள் டி.வி…..

 
         கேபிள் டிவி டிஜிட்டல்மயமாக வேண்டும் என்று மத்திய அரசு முனைப்பு காட்டுவதன் அடிப்படையில் சென்னையில் டிஜிட்டல் முறை விரைவில் அமலாக இருக்கிறது. கோயம்புத்தூரில் 2013 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறை கேபிள் டிவி அறிமுகமாகிறது. இந்த நேரத்தில், டிஜிட்டல் மயம் குறித்தும்.. இதில் உள்ள குழப்பங்கள்.. அவற்றுக்கான தீர்வுகள் பின்வருமாறு:-
டிஜிட்டல்மயம் என்றால் என்ன?
கண்ணாடி இழை வடங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலமாக தொலைக்காட்சி நிலையங்களின் சமிக்ஞைகளைப் பெற்று வழங்குவதுதான் கேபிள் டிவி என்று நம்மால் அறியப்பட்டு வந்தது.
சுமார் 20 வருடங்களாக நடைமுறையில் இருந்த இந்த முறையை டிஜிட்டல்மயமாக்குவதற்காக 1995 ஆம் வருட கேபிள் டிவி சட்டத்தை 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் திருத்தியது.
டிஜிட்டல்மயமாக்குவதன் மூலம் கேபிளில் வரும் தொலைக்காட்சி சமிக்ஞைகள் செட்டாப் பாக்ஸ் மூலம் இன்னும் தெளிவாக மக்களை சென்று சேரும். கேபிள் டிவி இல்லங்கள் ஒவ்வொன்றிலும் செட்டாப் பாக்ஸ் நிறுவுவதைக் கட்டாயமாக்கும் இந்த சட்ட திருத்தம் சென்னையில் மக்களிடம் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
செட்டாப் பாக்ஸ் என்பது நுகர்வோரின் நலன் கருதி மத்திய அரசால் படிப்படியாக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கேபிள் டிவியில் 70 தொலைக்காட்சி சேவைகளைப் பார்க்க முடிந்தால், செட்டாப் பாக்ஸ் மூலம் 500 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் வரை ஒரே விதமான தரத்தில் பார்க்க முடியும்.
செட்டாப் பாக்ஸ்களை விற்பதற்கு குறிப்பிட்ட எந்த நிறுவனத்திற்கும் ஏகபோக உரிமை வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. படிப்படியாக அறிமுகமாகும் இந்தத் திட்டம் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று விளக்குகிறார்கள் மத்திய அரசிடம் டிஜிட்டல் உரிமம் கோரி விண்ணப்பித்திருக்கும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தினர்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஏகபோகத்தை அனுமதிப்பது பார்வையாளர் நலனைப் பாதிக்கும். டில்லி மாநகரம் முழுமையாக டிஜிட்டல் சேவைக்கு மாறிவிட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது.
கேபிள் டிவி டிஜிட்டல் மயமாகும் இந்த காலகட்டத்தில், சேவையைப் பெறும்போது நுகர்வோருக்கு உள்ள குழப்பங்கள் ஏராளம்.. இப்படி ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை எப்படி சட்டரீதியாக நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிபுணர்கள் கருத்துக்கள் பின்வருமாறு:-
எந்த ஒரு சேவையையும் பொருளையும் நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கும்போது அதி்ல் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு அந்த அந்த நிறுவனங்களை முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்கிறது1986 ஆம் வருடத்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்.
இந்த நிலையில் தற்போது கேபிள் டிவி சேவை வழங்கி வரும் சில தனியார் நிறுவனங்கள் வரம்பு மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி இந்திய நுகர்வோர் சங்கத்தைச் சேர்ந்த தேசிகன் கூறும்போது:-
தமிழகத்தில் கேபிள் டிவி விவகாரம் ஒரு அரிதான சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார் .கேபிள் டிவி தொழிலில் தனி ஒருவரின் ஏகாதிபத்தியம் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர் இதை ஒழிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.பொதுமக்களும் அரசுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் தேசிகன் வலியுறுத்தினார்.
பணம் கொடுத்து கேபிள் டிவி சேவையைப் பெறும் நுகர்வோராகிய பொதுமக்களின் உரிமையும் ,விருப்பமும் பாதிக்கப்பட்டால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
நுகர்வோர் பெறும் எந்த ஒரு சேவையும் சட்ட வரம்பிற்கு உட்பட்டவையே என்பதே நிதர்சன உண்மை.இதில் எந்த குழப்பமும் நமக்கு தேவையில்லை.எப்போதெல்லாம் நுகர்வோராகிய நமது உரிமைகள் நசுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் தயங்காமல் சட்டத்தின் கதவுகளை தட்ட வேண்டு
-ஹாட் ஸ்பாட் நரேஷ்