சென்னையில் நாய் கண்காட்சி       தரவற்ற நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையில் புளூ கிராஸ் ஆஃப் இந்தியா சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது.
     சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. ஆதரவற்ற தெரு நாய்கள், உடல் குறைபாடு காரணமாக கைவிடப்பட்ட நாய்கள் பெருமளவில் இந்த கண்காட்சியில் கலந்துக்கொண்டன.
   ஆதரவற்ற நாய்களை விருப்பமுள்ளவர்கள் தத்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை புளு கிராஸ் செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய ஜனதா முன்னாள் எம்பியும்., விலங்கின ஆர்வலருமான மேனகா காந்தி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
                              -ஹாட் ஸ்பாட் நரேஷ்