இதயம் உடலுக்கு வெளியே இருந்த நிலையில்பெண் குழந்தை பிறந்தது


   அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உடலுக்கு வெளியே இதயம் இருந்த நிலையில் பிறந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நல்ல முறையில் வீடு திரும்பியது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆட்ரினா (Audrina) எனும் பெண் குழந்தை இதயம் உடலுக்கு வெளியே இருந்த நிலையில் பிறந்தது. கருவுற்ற 15-ம் வாரத்திலேயே குழந்தைக்கு இது போன்ற பாதிப்பு இருப்பதாகக் கண்டறிந்த மருத்துவர்கள் எக்டோபியா கார்டிஸ் (Ectopia Cordis) எனும் இந்த நோய் மிகவும் அரிதானது எனவும் குறிப்பிட்டனர்.
குழந்தை பிறந்த அடுத்த நாளே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முழுமையாக குணமடைந்த நிலையில் குழந்தை ஆட்ரினா-வுடன் (Audrina-வுடன்) அவரது தாய் வீடு திரும்பினார்.

                                                                                             -ஹாட் ஸ்பாட் நரேஷ்