சென்னையில் கணினி பயிற்சி மையத்தில் கொள்ளை

      சென்னை பெருங்குடி அருகே பட்டப்பகலில் கணினி பயிற்சி மையத்திற்குள் புகுந்த, ஒரு கும்பல் அதன் உரிமையாளரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை கொள்ளையடித்து சென்றது.
சென்னை எஸ்.ஆர்.பி., டூல்ஸ் அருகே கணினி பயிற்சி மையம் நடத்திவருபவர் ரெஜின் ராஜ். இவரது அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த நான்கு பேர் கும்பல், அங்கிருந்தவர்களை தாக்கி, 5 சவரன் நகைகள், மூன்று லேப்டாப், 10 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
அப்போது, அந்த மையத்தில் இருந்த பெண் ஊழியர்களையும் தாக்கி, மானபங்கம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. பட்டபகலில் நடந்துள்ள
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துரைப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.