உணவுப் பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்க காரணம்

www.thagavalthalam.com Pasumai Nayagan


         தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வருவாய் அடிப்படையில் பாகுபாடு ஏதுமின்றி அனைவருக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அனைவருக்கும் இலவச அரிசி வழங்க, மத்திய அரசு கிலோவுக்கு 5 ரூபாய் 65 காசுகள் என்ற மானிய விலையில் ஒதுக்கும் அரிசி போக, வெளிச்சந்தையிலும் 20 ஆயிரம் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.
     உணவுப் பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில், பயனாளிகள் எண்ணிக்கை குறையும் என்பதால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசியின் அளவு 2.96 லட்சம் டன்னில் இருந்து 2.24 லட்சம் டன்னாக குறையும். இதனால், அதிக அளவு அரிசியை சந்தைவிலைக்கு வாங்க நேரிடும் என்பதால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
தமிழகத்தில் ஏறத்தாழ பாதிப்பேர் நகரங்களில் வசிப்பதால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் தற்போது பயனடைபவர்களில் மூன்றில் 2 பங்கு பேரை நீக்கும் நிலை ஏற்படும். இதேபோல், மேலும் பல அம்சங்களில் முரண்பாடு இருப்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.