தமிழ்நாடு மாநில பறவை

பசுமைநாயகன் www.thagavalthalam.com
மரகதப்புறா / EMRALD DOVE


       காவேரியின் துணைநதியான மோயார் பாயும் பகுதிகளில் தமிழ்நாடு மாநில பறவையான பஞ்சவர்ண அல் லது மரகத புறாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசினகுடி பகுதிகளிலும், முதுமலை புலிகள் சரணாலயத்திலும் இவை ஏராள மாகக் காணப்படுகின்றன. தீர்க்கமான பாதுகாப்பு நடைமுறைகள், தகுந்த தட்பவெப்பம், ஆரோக்கியமான வாழ்விடம் காரணமாக இப்பகுதியில் இவை பெருகி வருகின்றன. வெண்கல நிறம் உடைய இறகுகளைக் கொண்ட மரகத புறாக்களை எளிதில் காண முடி யாது. அவை வாழும் சூழலுக் கேற்ற சிறகமைப்பைக் கொண்டவை. மோயார் நதியை சுற்றி அமைந்துள்ள வனப்பகுதிகளில் இவை தற்போது பெருகி வருகின்றன. உலக வனவிலங் குகள் நிதியத்தால் கவனிப்பாரற்ற பறவை என்று முத்திரை குத்தப்பட்ட மரகதப்புறா பெருகிவருவது இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


      காடுகளில் வசிக்கும் இப்பறவைகள் சுற்றுலாப் பயணிகள் வீசிவிட்டு செல் லும் துரித உணவு வகைகளை உண் ணுவதில்லை. இவை இயற்கை அளிக் கும் கனிகளையும், காய்களையும் மட்டும் உண்ணக்கூடியவை. இதன் பலன் என்னவென்றால் அரிய மரங் கள், செடிகள் வனமெங்கும் விருத்தி யடைவதற்கு இவை உதவுகின்றன. வாதம் சார்ந்த நோய்களுக்கு உகந்த நாட்டுப்புற மருந்து என்று கூறப் படுவதால் இவை பெருமளவில் வேட் டையாடப்படுகின்றன. இது தவறான கருத்து. இந்த வேட்டை தவிர்க்கப் பட்டால் இவை இன்னும் அதிகமாக பல்கிப் பெருகும். மேலும் மரகதப் புறா மக்கள் ஜனத்தொகை மிகுந்த இடங்களில் உள்ள அடர்த்தியான காடுகளில் ஏராளமாக வாழக் கூடியவை.

                                                                               -P.V.உமாதேவி