சென்னையில், மாஞ்சா நூல் அறுத்ததில், கணினி மென் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த அந்த சிறுவன் மீது அஜாக்கிரதையாக
பட்டம் விட்டதாக 304 A என்ற பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு
செய்தனர். பின்னர், அந்த சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்
சேர்த்தனர்.
சத்யவாணி முத்து நகரில் அதிக அளவில் பட்டம் விடப்படுவதாக தகவல்
கிடைத்ததையடுத்து திருவல்லிக்கேணி தனிப்படை காவல்துறையினர் அப் பகுதியில்
ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப் பகுதியில் பட்டம் விட்டுக்
கொண்டிருந்த இரு சிறுவர்களை அழைத்துச் சென்று தனிப்படையினர் விசாரித்தனர்.
அதில் ஒரு சிறுவன் தான் நேற்று மாஞ்சா நூல் கொண்டப் பட்டத்தை விட்டது
என்பது விசாரனையில் தெரிய வந்தது. மந்தவெளியைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவர்
இருசக்கர வாகனத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்று
கொண்டிருந்த போது, மாஞ்சா நூல் காற்றாடி கழுத்தை அறுத்ததால் உயிரிழந்தார்.
-ஹாட் ஸ்பாட் நரேஷ்