அட்மின் அனுமதி இல்லாமலேயே வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைவது எப்படி

Thagavalthalam


வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் அநுதி கிடைக்காமல் நீங்கள் எப்போதாவது எதோ ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர முடியாமல் காத்து கிடந்தது உண்டா..?? அதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள் என்றால் அதுவே கடைசியாக இருக்கட்டும். தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் அம்சம் மூலம் அட்மின் அனுமதி இல்லாமலேயே வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைவது என்பது சாத்தியமாகிறது.
பீட்டா அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு 2.16.281 மேம்படுத்தப்பட்ட பதிப்பு உடன் ஐஓஎஸ்பயனர்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் அப்டேட் ஆனது கிடைக்கப்பெறுகிறது.
  1.   அப்டேட்தனை இன்ஸ்டால் செய்யவும் : நீங்கள் இந்த புதிய வசதியை பெற உங்கள் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் தனை புதுப்பிக்க வேண்டும்.
  2.     பங்கேற்பாளருக்கு அழைப்பு அனுப்பவும் : குழுவில் பார்ட்டிசிபன்ட் ஆக அழைப்பு விடுக்க, நீங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளுக்கு அனுப்பக்கூடிய அழைப்பு இணைப்பு கிடைக்கும்.
 3.    ஒருமுறை உங்களுக்கு அந்த இணைப்பு கிடைத்ததும் நீங்கள் குறிப்பிட்ட குழுவில் இணைய விரும்புகிறீர்களா என்ற அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கும். உடன் இந்த குழுவானது இவரால் உருவாக்கப்பட்டது இத்தனை மெம்பர்கள் உள்ளன ஏன தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள். உடன் குழுவில் ஜாயின் ஆக வேண்டுமா என்று கேட்கப்படும். அதை கிளிக் செய்யவும்.
  4.     நீங்கள் இணைப்பை கிளிக் உடனேயே, அது தானாகவே சரிபார்ப்புகள் நிகழ்த்த தொடங்கும் ஒருமுறை வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்பு நீங்கள் இறுதியாக குழுவில் இணைவீர்கள்.
Source:gizbot

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்

thagavalthalam cauvery


        காவிரி மேலாண்மை வாரியம் 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ், சிபிஐ, தாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன.
காவிரியில் 50 டிஎம்சி நீர் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேற்பார்வை குழுவை தமிழகமும் கர்நாடகாவும் எதிர்க்கின்றன. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியம்தான் இறுதித் தீர்வாக இருக்கும் என்று கூறியதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன.
காங்கிரஸ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்த உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி சற்றும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாமக
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தமாகா தலைவர் வாசன் வரவேற்பு அளித்துள்ளார். அதே நேரத்தில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி
மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய தமிழர்களுக்கு ஆறுதலைத் தரக் கூடிய ஒரு தீர்ப்பை பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கனவில் இருக்கிறது பாஜக.
இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசு தாமதிக்க வாய்ப்பிருக்கிறது அல்லது கர்நாடகாவுக்கு சாதகமான ஒரு குழுவை அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகையால் உரிய வழிகாட்டுதல்களின்படியும் உச்சநீதிமன்ற உத்தரவின்படியும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திட உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் வஞ்சித்தே வரும் மத்திய அரசு, மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் எந்த ஒரு இழுத்தடிப்பையும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை நிலைநாட்டுவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி மத்திய பாஜக அரசு அமைத்திட வேண்டும்.
இதற்கான அழுத்தங்களை மத்திய அரசுக்கு தமிழர்கள் நாம் ஒருங்கிணைத்து கொடுக்க வேண்டும். காவிரி ஆற்று நீர் விவகாரத்தில் நமக்கான உரிமையை வென்றெடுக்கும் இறுதித் தருணம் இது. அத்தனை மாச்சரியங்களை கடந்து தமிழராய் ஓரணியில் நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருமித்த குரல் கொடுப்போம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
விவசாய சங்கங்கள்
அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியன், உடனடியாக தமிழக அரசு பிரதமர் மோடியை சந்தித்து மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்று நாகை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் அங்குள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Source:oneindia

டி கே ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி யாகவும் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி யாகவும் பொறுப்பு


 T K R & GEORGE Thagavalthalam News
  சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் - ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி-யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி (கூடுதல் பொறுப்பு) ஆகவும் நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக மீண்டும் பொறுப்புக்கு வந்திருக்கிறார் எஸ்.ஜார்ஜ்.    டந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னையின் போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் இருந்தார். ‘குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள், முக்கியப் பொறுப்புகளில் இருந்தால், தேர்தல் நியாயமாக நடக்காது’ என்று அப்போது தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., புகாராக அளித்தது. அந்தப் பட்டியலில் அப்போது இருந்த முதல் பெயர் டி.கே.ஆர். தேர்தல் ஆணைய நடவடிக்கையாக டி.கே.ஆர் விடுப்பில் போனார். சென்னைக்குத் தற்காலிக போலீஸ் கமிஷனராக டி.கே.ஆருக்குப் பதில் மீண்டும் ஜார்ஜ் அல்லது பழைய கமிஷனர் திரிபாதி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராதவகையில் அசுதோஷ் சுக்லா, சென்னை போலீஸ் கமிஷனர் ஆனார். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்ததும், மீண்டும் டி.கே.ஆர்., சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார். பழைய சென்னை போலீஸ் கமிஷனர்கள் திரிபாதி, ஜார்ஜ் போன்றோர் அப்போது பவர் இல்லாத இடங்களில் இருந்தனர். பணி நீட்டிப்பிலேயே மீண்டும் மீண்டும் டி.ஜி.பி-யாக வலம்வந்த கு.ராமானுஜம் போன பின்னர், அந்த இடத்துக்கு வந்தவர் அசோக்குமார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரும் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அரசு, அவருக்குப் பணி நீட்டிப்பை அளித்து மீண்டும் டி.ஜி.பி ஆக்கியது.

TKR IPSThagavalthalam News

கு.ராமானுஜத்துக்கு அளித்த பணி நீட்டிப்பால், நரேந்திரபால் சிங் உள்ளிட்ட பல டி.ஜி.பி-கள் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி என்ற கம்பீரமான மாநில அதிகாரப் பொறுப்புக்கு வர முடியாமலேயே போய்விட்டது. அசோக்குமாருக்கு அளித்த பணி நீட்டிப்பால், சில மாதங்களுக்கு முன் சத்தமே இல்லாமல் நரேந்திரபால் சிங்போல வீட்டுக்குப்போன இன்னொரு டி.ஜி.பி., முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனரான சேகர். ஆட்சியாளர்கள் விருப்பத்தைப் பொறுத்தே போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் போன்ற பதவிகள் அலங்கரிக்கப்படுவதால்... அந்தப் பதவிகளுக்கு வருகிறவர்கள் தலைமீது எந்த நேரமும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருப்பது கண்கூடு. பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள ஒருவரை, போலீஸ் டி.ஜி.பி ஆக்கி... அந்த மூன்று மாதங்கள் முடிந்ததும் அவருக்கு மேலும், இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு கொடுப்பது மாநில அரசுகளின் எண்ணவோட்டத்தைப் பொறுத்தே எல்லாக் காலங்களிலும் அமைந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் கே.பி.ஜெயின். அவர் பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் இருந்த நிலையில், திடீரென விருப்பத்தின்பேரில் அவர் விடுமுறையில் செல்வதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்து, சீனியாரிட்டி முறையில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக வரவேண்டியவர் நட்ராஜ் (தற்போது இவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ). ஆனால், தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி-யாக ஒரு பெண்ணை நியமிப்பதாகச் சொல்லி லத்திகா சரணை நியமித்தது. நட்ராஜ் தீர்ப்பாயத்துக்குப் போனார். 

‘‘டி.ஜி.பி அந்தஸ்து ‘பேனலில்’ லத்திகா சரண் இருப்பதால், நாங்கள் தலையிட முடியாது. யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது அரசின் கொள்கை முடிவு’’ என்றது தீர்ப்பாயம்.
போலீஸ் கமிஷனர்கள், டி.ஜி.பி-க்கள் மாற்றப்படுவதற்கும், விடுமுறையில் வீட்டுக்குப்போவதாகச் சொல்லிவிட்டும், சொல்லிக்கொள்ளாமலும் போவதும் காலந்தோறும் நடந்து வருவதுதான். மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகியுள்ள ஜார்ஜுக்கு கருணாநிதி நள்ளிரவு கைது ஆபரேஷன், முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க-வினர் மீதான நடவடிக்கை... என்று ஆளும் அ.தி.மு.க-வுக்கான ‘நெஞ்சைத் தொடும்’ விஷயங்கள் நிறைய அணிவகுக்கின்றன. 
‘‘புதிய டி.ஜி.பி-யாகப் பொறுப்பேற்றிருக்கும் டி.கே.ஆருக்கு ஏற்கெனவே ஆளும் கட்சிக்கு ஆதரவாக ‘சாதித்த’ பல விஷயங்கள் அவர்களின் குட் லிஸ்ட்டில் இருந்தாலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றித் தேர்தலாய் நடத்தித் தர முன்கூட்டியே கொடுக்கப்பட்ட பரிசுதான் டி.ஜி.பி பதவி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

George IPS Thagavalthalam Newsடி.ஜி.பி., கமிஷனர் என்று பெரிய பல பதவிகளே இப்படியும் அப்படியுமாய் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமே இல்லாமல், சென்னையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாச்சலமும் மாற்றப்பட்டு டிரான்ஸ்போர்ட் விஜிலென்ஸ் கமிஷனராகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். ‘‘சி.சி.பி-க்கு (மத்திய குற்றப் பிரிவு) இவர் வந்த பின்னால் மொத்த வருமானமும் சுத்தமா கையைவிட்டுப் போயிடுச்சு. மொத்தத்துல இங்கிருந்து கிளம்பினால் சரி’’ என்று சாபத்தை வாங்கிப்போகும் அளவுக்கு இருந்திருக்கிறார் அருணாச்சலம்.
கமிஷனர், டி.ஜி.பி போன்ற பதவிகளுக்குப் புதியவர்கள் வந்தது எப்படி என்ற தகவலைப்போல், ‘டி.ஜி.பி ஏன் விடுப்பில் போனார்’ என்பதற்கும் காரணத்தைச் சொல்கிறார்கள் போலீஸ் ஏரியாவில்.

‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் யார், யாரை எங்கே நியமிக்கலாம் என்ற அளவுக்கு மிகவும் வேக வேகமாக மாதிரி போஸ்டிங் லிஸ்ட் ஒன்றை முக்கியமான ஓர் அறிவாலய குரூப் தயாரித்துக் கொண்டிருந்தது...
அவர்கள், தலைமை தங்களுக்கான ‘அஜென்டா’ படி அதைத் தயாரித்தார்கள். அதில், தவறு ஏதுமில்லை. ஆனால், இரண்டாண்டு பணி நீட்டிப்பைக் கொடுத்த அ.தி.மு.க-வுக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டிய அசோக்குமார், அதை அறிவாலயத்துக்குக் காட்டிவிட்டார். ஜெயலலிதா முதல்வரானதும் இதுகுறித்து வந்த புகார்களைக் காட்டி அசோக்குமாரிடமே விளக்கம் கேட்டார். அசோக்குமாரோ, “இது அப்பட்டமான பொய்” என்று கூறிச் சமாளித்துவிட்டார். ஆனால், சத்தமே இல்லாமல் அவருக்கு ‘இன்ட்’ மூலம் கிடைத்த தகவலால் அசோக்குமார் சொன்னதெல்லாம் பொய் என்று தெரியவந்தது. அவர் வீட்டுக்குப் போனார்... டி.கே.ஆர் அந்த இடத்துக்கு வந்தார்” இதுதான் நடந்த கதை என்றனர்.


சசிகலா புஷ்பாவை ஆஃப் செய்ய... ‘கனிம’ முதலாளியின் மனம் குளிர எனப் பல விஷயங்கள் பச்சமுத்து கைது விவகாரத்தில் பயணித்தாலும், எங்கேயும் பிசிறடிக்காமல் அதில் நுட்பமாகச் செயல்பட்டதில் கமிஷனருக்கு ஒரு பூங்கொத்து... பா.ம.க-வின் பாலு, கார்டனுக்கு வந்துபோனதே பச்சமுத்து கைது தொடர்பான ஃபைலை கொடுத்துவிட்டுப் போகத்தான் என்று மேட்டரை லீக் செய்து பா.ம.க ஏரியாவைக் குளிரவைத்ததில் சிட்டி உளவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணனுக்கு ஒரு பூங்கொத்து என்று மலர்களால் போலீஸ் ஏரியா மணமணக்கிறது.

சுற்றுச்சூழல் ரதயாத்திரை


 Thagavalthalam பசுமைநாயகன் Pasumainayagan
 Thagavalthalamசுற்றுச்சூழல் ரதயாத்திரை  Pasumai Nayagan
 Thagavalthalam பசுமைநாயகன் Thagaval Pasumainayagan
 Thagavalthalam

                மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள் கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது? 
 Pasumainayagan பசுமை நாயகன்10ம் நாள் சுற்றுச்சூழல் ரதயாத்திரையில் 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாணவர் படை (NCC Camp)ல் அதிகாரிகளுடன் மரம் நடவு செய்த போது எடுத்தப்படம். 

சுற்றுச்சூழல் பசுமைநாயகன் thagaval


மரம் நடும் வேகத்தை விட, மரம் வெட்டும் வேகம் அதிகமாக இருக்கிறது. 
உலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான். இதோ நாமும் சில மரங்களை நடவு செய்ய வாயுப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம் உலக வெப்பத்தை குறைப்பதற்கு. நாம் மனிதனாக இந்த பூமியில் மரக்கன்றுக்களை நட்டு நம் கண்களால் அடுத்த தலைமுறையின் வாழ்வைக் காணக்கூடிய அடையாளச் சின்னங்களாக மரங்களை விட்டு (நட்டு) செல்வோம். எங்களுக்கு மரம் நட இடம் இல்லை 
என்று கூறுபவர்கள் எங்கள் அறக்கட்டளைக்கு 
 
Pasumai4u என்ற பெயரில் பணம் செலுத்தினால் நாங்கள் மரம் நடவு செய்து, நடவு செய்ததற்கான சான்றிதழம் (Certificate) அளிக்கின்றோம்.


http://www.thagavalthalam.com
பசுமை நாயகன்
09941681652
mail : pasumai4u@gmail.com

ரதயாத்திரை

பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval


பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: வேளச்சேரி பகுதி வாசிகள் கொதிப்பு.......!Pasumai Nayagan www.thagavalthalam.com பசுமை நாயகன்
   

       வேளச்சேரியில், பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில், அடர்த்தியான மரங்கள் அதிகம் கொண்ட மண்டலமாக அடையாறு மண்டலம் திகழ்கிறது. அடையாறு தியாசோபிகல் சொசைட்டி, ஐ.ஐ.டி., ராஜ்பவன், சிறுவர்பூங்கா, அண்ணாபல்கலை ஆகியவற்றில் ஏராளமான மரங்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் குடியிருப்புகள், சாலையோரங்களிலும், அதிப்படியான மரங்கள் உள்ளன.கண்டனம் இந்த பகுதியில், பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தற்போது நடக்கிறது. அந்த இடங்களில், சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

      இதற்கு மாநகராட்சியும் அனுமதியளித்து வருகிறது. சமீபத்தில், வேளச்சேரி, ராணி தெருவில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட மரம் ஒன்று பெரும் சர்ச்சையாகி வருகிறது. மரம் வெட்டப்பட்டதற்கு, பல்வேறு நலச்சங்கத்தினர் மற்றும் சமூகநல விரும்பிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூகநல விரும்பிகள் கூறியதாவது.


       வேளச்சேரி, ராணி தெருவில் இருந்த மரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரு மீட்டர் விட்டம் கொண்ட இந்த பசுமையான மரம் அடியோடு வெட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தனர் என்றே தெரியவில்லை. 'விசாரிக்கவும்' எங்கள் விசாரணையின்படி இந்த மரம் வெட்டுவதற்கு சில லட்சங்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரம் வெட்ட அனுமதி கொடுத்தது யார். அந்த மரத்தை வெட்ட பணம் கைமாறியதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மோகனை அலைபேசியில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை.

                                                                                        -பசுமை நாயகன்