அதிர்ச்சி தகவல்-மரபணு மஞ்சள் வாழைப்பழம் :


பசுமை நாயகன் Pasumai Nayagan thagavalthalam

      குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமான வாழைப்பழம் இப்போது சாபமாக மாறி வருகிறது.
   யற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள் பூம்பழம், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி, செவ்வாழை ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இவை ஒவ்வொன்றும் உடல் நலனுக்கு நன்மை செய்பவை.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் வயிறு கோளாறு இருப்பவர்களும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று ஞாபகமாக எச்சரித்து அனுப்புகிறார்கள்.
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன் என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
குழந்தைகளுக்கோ உறவினர்களுக்கோ வாழைப்பழம் வாங்க போகும் போது இந்த பெரிய வகை மஞ்சள் பழங்களை வாங்காதீர்கள். நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


அதிக வரத்து காரணமாக காய்கறி விலை குறைவு


பசுமை நாயகன் Pasumai Nayagan thagavalthalam

            
            வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய் கறிகள் அதிக வரத்து காரணமாக திருவள்ளூர் மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் விலை குறைந்துள்ளது.இதனால் கார்த்திகை மாதத்தில் ஐய்யப சாமிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     கடந்த சில வாரங்கள் வரை வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறி வகைளின் விலை அதிகளவில் இருந்தது. இதில் வெங்காயம் கிலோ ரூ 100 வரை விற்கப்பட்டு அரசியலில் இடம்பெற்றது. அதே போல் தக்காளி ஒரு கிலோ ரூ. 60 முதல் 80 வரையிலும் விற்கப்பட்டது. இதனால் மாத ஊதியம் பெறும் நடுத்தர குடும்பத்தினர் தங்களது பட்ஜெட்டில் துண்டு விழுவதாக புலம்பும் நிலை ஏற்பட்டது. ஓட்டல்கள், டிபன் கடைகளலும் விலை உயர்வு ஏற்பட்டது. மேலும் வடை, பஜ்ஜி மற்றும் போன்டா போன்ற ஸ்னாக்ஸ் வகைகளும் ரூ. 2 முதல் 3 வரை விற்றுக் கொண்டிருந்தது. ரூ. 5 முதல் ரூ. 7 வரை விற்கப்பட்டது.
     இந்த நிலையில் கார்த்திகை மாதத்தையொட்டி ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் ஐய்யப்ப பக்தர்கள் அசைவை உணவை கைவிட்டு, 40 நாள்களுக்கு சைவ உணவை மட்டுமே உட்கொள்வார்கள். அவர்களும் காய்கறி விலை உயர்வால் கடும் அதிருப்தியில் இருந்தனர்.இந்த நிலையில் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி விலை வெகுவாக குறைந்தது. இதனால் விற்பனையும் அதிகளவில் உள்ளது. இதுகுறித்து காய்கறி விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவர் கூறியது: கடந்த சில வாரங்கள் வரை வெங்காயம், தக்காளி, பீன்ஸ், அவரை, பெங்களூர் கத்திரி, இஞ்சி ஆகிய காய்வகைகள் வெளியில் இருந்து வரும் வரத்து குறைந்திருந்தது. இதனால் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
    ஆனால் உள்ளூர் விளைச்சல்களான கத்திரி, வெண்டை, சுரக்காய், பீர்கங்காய் போன்ற காய்கறிகள் அன்று முதல் இன்று வரை ஒரே விலையாக உள்ளது. இதனால் தற்போது வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.
      ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்கறிகள் சில்லரை விற்பனை விலை: (பழைய விலை அடைப்புக் குறிக்குள்) ஒரு கிலோ, வெங்காயம் சிறியது ரூ. 40 (60), பெரியது ரூ. 50 (90), தக்காளி ரூ.40 (60), கத்திரி ரூ. 15 (20), முள்ளங்கி ரூ.10 (20), பீட்ரூட் ரூ. 15, (25), உருளை ரூ. 35 (50), கருணை ரூ. 20 (30), கோஸ் ரூ. 20 (35), கேரட் ரூ. 40 (50), அவரை ரூ. 25 (40), பீன்ஸ் ரூ. 20 (40), வெங்களூர் கத்திரி ரூ. 15 (25), மாங்கா ரூ. 35 (50), சேனை கிழங்கு ரூ. 30 (45), இஞ்சி ரூ. 70 (100), காளி பிளவர் (ஒன்று) ரூ. 15 முதல் ரூ. 40 வரையில், கீரை வகைகள் ரூ. 10 முதல் 15 வரையிலும் விற்கப்படுகிறது.