2 ஜி ஊழல் வழக்கு தொடர்பாக பிரதமர் ஆஜராகத் தேவையில்லை – பி.சி சாக்கோ

   2 ஜி ஊழல் வழக்கு தொடர்பாக பிரதமர் ஆஜராகத் தேவையில்லை என பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி சாக்கோ தெரிவித்துள்ளார்.
2 ஜி ஊழல் வழக்கு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தை மீண்டும்பாரதிய ஜனதா புறக்கணித்ததுள்ளது. மேலும் அக்கட்சி பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க  வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வருகிறது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி சாக்கோ, பிரதமர் ஆஜராகத் தேவையில்லை என்றும், சிதம்பரம் ஆஜராவதற்கு எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லை என்றும் கூறினார்.
பா.ஜ.க தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதால் இது குறித்து முடிவெடுக்குமாறு அவர் சபாநாயகர் மீரா குமாருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், பாராளுமன்றக் கூட்டுக் குழுவே இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.                                 
                                                                     -சத்திஷ் K.K.K.nagar