ஐஆர்டிஏவின் புதிய விதிமுறையால் வாகன காப்பீடு பிரீமியம் குறையும் என எதிர்பார்ப்பு

        ண்மையில் சில நிறுவனங்களால் உயர்த்தப்பட்ட வாகன காப்பீட்டு பிரீமியம், இத்துறைக்கான வழிகாட்டு ஆணையமான ஐஆர்டிஏ.வின் புதிய அணுகுமுறையால், குறையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஐஆர்டிஏ விரைவில் வெளியிட உள்ள புதிய ஆணையின்படி, வாகன காப்பீட்டில் டயர்கள், ட்யூப்கள், பேட்டரிகள், காற்றுப் பை ஆகியவற்றின் தேய்மானத்தைக் கணக்கிடும்போது, வாகனத்தின் பெயின்ட் செலவையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி விதிமுறையை அது, கடந்த 17ம் தேதி வெளியிட்டது. அதன் மீது பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் நவம்பர் 9ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று ஐ. ஆர்.டி.ஏ. அறிவித்துள்ளது.
வாகன காப்பீடு செய்யும்போது, வாகனத்தின் தேய்மானம் கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப பாலிசிதாரர் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை நிர்ணயிக்க இந்த புதிய விதிமுறை வகை செய்யும். வாகனத்தின் பிளாஸ்டிக் பாகங்களுக்கு தேய்மானம் கணக்கிடப்படும் நிலையில், பாலிமர் என்ற பிளாஸ்டிக் அடிப்படையிலான பெயின்ட்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.ஆர்.டி.ஏ. கருத்து தெரிவித்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், வாகன காப்பீடு பிரீமியம் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.                   
                                      -இணைய செய்தியாளர் - முருகேஸ்