ஆர்எஸ்எஸ் தலைவருடன் நரேந்திர மோதி சந்திப்பு

      பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துடன் விவாதிக்கவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கு இன்று வந்த மோதி சுமார் 3 மணி நேரம் பகவத்துடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும் நரேந்திர மோதி கூறினார். எனினும், அரசியல் குறித்து இருவரும் பேசவில்லை என்றும், பாரதிய ஜனதாவின் உள் விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடுவதில்லை என்றும் நரேந்திர மோதி தெரிவித்தார்.
முன்னதாக 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ராம்ஜெத்மலானி வலியுறுத்தியிருந்தார்.