பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற வாலிபர் விமானநிலையத்தில் கைது

        வேலை வாங்கி தருவதாக கூறி நேபாள பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்க முயன்ற வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கையை சேர்ந்த முகமது நிசார் என்ற வாலிபர் நேபாளத்தை சேர்ந்த 4 இளம்பெண்களுடன் கொழும்பு வழியே துபாய் செல்லவிருந்தார். அப்போது குடியுரிமை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர்கள் போலி விசாக்கள் எடுத்து செல்வது தெரிய வந்தது.
இதனையடுத்து சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி நேபாள பெண்கள் 4 பேரை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முகமது நிசார் முயன்றது தெரியவந்தது.