சென்னையில் பட்டப் பகலில் ரூ.53 லட்சம் பணம் கொள்ளை

       சென்னையிலில் வங்கி முன் நின்றிருந்த காரில் வைக்கப் பட்டிருந்த  53 லட்சம் ரூபாய் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச்  சேர்ந்தவர் பாபு என்பவர் அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில், அவரது வங்கி கணக்கில் ரூ.53 லட்சம் பணம் எடுத்துள்ளார். கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மற்றொரு கிளையில் பணம் எடுப்பதற்காக தனது நண்பர் ஒருவருடன் காரில் புரசைவாக்கம் வந்துளளார்.
வங்கி முன் காரை நிறுத்தி விட்டு, பணம் எடுக்க வங்கிக்குள் சென்ற போது, காரில் ஏற்கனவே வைக்கப் பட்டிருந்த ரூ.53 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து பாபு புகார் கொடுத்ததையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.