உள்நாட்டு முனையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட முதலமைச்சர் கோரிக்கை


      சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள 2வது உள்நாட்டு முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு இருக்கும் 2வது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையங்கள் திறப்பதற்கு தயாராக இருப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த முனையங்கள் சென்னையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், அதிகரித்து வரும் பயணிகளுக்கும் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2வது உள்நாட்டு முனையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
                                    -ஹாட் ஸ்பாட் நரேஷ்