காதலர் தினமான இன்று 200 நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு



காதலர் தினமான இன்று, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
   இதையொட்டி 200 நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் உள்ள பெண்ணுரிமை அமைப்புகள், பெண்களுக்கு ஆதரவான அமைப்புகள் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை இன்று நடத்துகின்றன.
   ஒன் பில்லியன் ரைசிங் (ONE BILLION RISING) என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரி சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடல் வரிகள்...
வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தி
மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன்..
இனிமேலும் பயப்பட மாட்டேன்
வாசலை பயமின்றி கடப்பேன்
நடப்போம், ஆடுவோம், எழுவோம்..
நடப்போம், ஆடுவோம், எழுவோம்..

நாம் வாழும் பாதுகாப்பான, அடக்குமுறை இல்லாத உலகை பார்ப்பேன்.
பாலியல் வன்கொடுமை, முறையற்ற உறவு இனி வேண்டாம்
நீங்கள் அனுபவிக்க பெண்கள், சொத்து அல்ல.

யாரும் என்னை சொந்தம் கொண்டாட முடியாது.. நான் அற்புதமானவள்.. நான் உயிர்ப்புடன் என்னை உணர்கிறேன்.
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நான் காதலிக்கிறேன்
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நான் கனவு காண்கிறேன்..
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நிறைவாக இருக்கிறேன்.

கதறல்களை நிறுத்த நடனமாடுகிறேன்.
தடைகளை உடைக்க நடனமாடுகிறேன்
வலிகளை நிறுத்த நடனமாடுகிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்த நடனமாடுகிறேன்.
தடைச்சங்கிலியை உடைக்கும் நேரமிது..
தடைகளை உடைக்கும் நேரமிது..

ஆடுவோம்.. எழுவோம்.. .
ஆடுவோம்.. எழுவோம்
..

இத்தனை மடமைக்கும் மத்தியில் நாம் ஒன்றிணைகிறோம்.
சிறப்பான உலகம் இருக்கிறது…
உங்கள் சகோதரிகளையும் சகோதரர்களையும் உங்கள் கரத்தோடு சேர்த்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு பெண்களையும், சிறுமிகளையும் அணுகுவோம்.
இது என் உடல்.. என் உடல் புனிதமானது
இதற்கு மேலும் அனுமதிக்க முடியது.. 
இனியும் வன்முறைகள் வேண்டாம்
நாங்கள் தாயாக இருக்கிறோம்.. 
நாங்கள் ஆசிரியர்களாக இருக்கிறோம்
நாங்கள் அழகான படைப்புகள்

நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நான் காதலிக்கிறேன்
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நான் கனவு காண்கிறேன்..
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நிறைவாக இருக்கிறேன்.

கதறல்களை நிறுத்த நடனமாடுகிறேன்.
தடைகளை உடைக்க நடனமாடுகிறேன்
வலிகளை நிறுத்த நடனமாடுகிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்த நடனமாடுகிறேன்.
தடைச்சங்கிலியை உடைக்கும் நேரமிது..
தடைகளை உடைக்கும் நேரமிது..

ஆடுவோம்.. எழுவோம்.. .
ஆடுவோம்.. எழுவோம்

சகோதரி நீ எனக்கு உதவ மாட்டாயா ?
உனக்காக நீ எழமாட்டாயா?
ஆடுவோம். எழுவோம்
சகோதரி நீ எனக்கு உதவ மாட்டாயா ?
உனக்காக நீ எழமாட்டாயா?
இது என் உடல்.. என் உடல் புனிதமானது
இதற்கு மேலும் அனுமதிக்க முடியது..
இனியும் வன்முறைகள் வேண்டாம்
நாங்கள் தாயாக இருக்கிறோம்..
நாங்கள் ஆசிரியர்களாக இருக்கிறோம்
நாங்கள் அழகான படைப்புகள்

நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நான் காதலிக்கிறேன்
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நான் கனவு காண்கிறேன்..
நடனமாடுகிறேன்.. ஏனென்றால் நிறைவாக இருக்கிறேன்.

கதறல்களை நிறுத்த நடனமாடுகிறேன்.
தடைகளை உடைக்க நடனமாடுகிறேன்
வலிகளை நிறுத்த நடனமாடுகிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்த நடனமாடுகிறேன்.
தடைச்சங்கிலியை உடைக்கும் நேரமிது..
தடைகளை உடைக்கும் நேரமிது..

இவ்வாறு அந்தப் பாடல் முடிகிறது.
                                                  -ஹாட் ஸ்பாட் நரேஷ்