பெற்றோருக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் எதிர்காலமாக விளங்குபவர்கள் குழந்தைகள்.


  பெற்றோருக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் எதிர்காலமாக விளங்குபவர்கள் குழந்தைகள். எனினும் அவர்களில் பலர், குழந்தைப்பருவத்திலேயே மடிந்து விடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சத்து குறைவாக உள்ள அவர்களுக்கு, திடீரென்று நோய் வந்தால் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. அத்தகைய நிலையில், அவர்களைப் பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள கூடுதல் பொறுப்பு என்ன?
   புதியதோர் உலகில் பிரவேசிக்கும் இவர்களைப் போன்ற பல குழந்தைகள் ஏன் பிறந்தோம் என்றே தெரியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தில், ஆயிரம் குழந்தைகளுக்கு 21 குழந்தைகள் இறந்து வருகின்றன. இந்த இறப்பை தடுப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன": தமிழகம் முழுவதும் வெறும் 8         இடங்களில் மட்டுமே இருக்கும் இந்த ஆம்புலன்ஸ்கள் பெரும்பாலும் நோய்வாய்பட்ட குழந்தைகளை, சிறிய மருத்துவமனைகளில் இருந்து பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவே பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து மாநில சுகாதாரத்துறை செயலரிடம் கேட்டபோது, சிறப்பு 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தேவை கூடுதல் சேவை: தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வருவதோடு, கிராமப்புறங்களில் குழந்தைகள் நல மருத்துவர்களைஅதிகளவில் நியமிக்க வேண்டும் என்று பொது நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
                                                                                              -ஹாட் ஸ்பாட் நரேஷ்